கோவையில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டி - பாராட்டு சான்றிதழ் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் அரசி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இவ்விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப்போட்டி கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகளையும், சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசுக் கோப்பைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தரச்சான்றிதழ் உள்ளது. அந்த தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? குறித்து விழிப்புணர்வுடன் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...