அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்ல தயாராக இருப்பதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு காளைக்கு 15 நபர்கள் வருவதாகவும், இவர்கள் குடிபோதையில் அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாகவும் இதை தட்டிக் கேட்பவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதுவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கானோரில் சிலர், மதுபோதையில் குடியிருப்பு பகுதியில் சென்று மது அருந்துவதும், குடிபோதையில் வீட்டு வாசலில் அலங்கோல நிலையில் படுத்துள்ளனர்.



ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பிறகு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதி முழுவதும் மனித கழிவுகளால் நோய் பரவுவதாகவும், கடந்த இரண்டு முறையும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் ஊருக்குள் வந்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காளைகள் தாக்கியதில் இரண்டு பேர் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் ஜல்லிக்கட்டு போட்டி, நடத்தக் கூடாது என மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பட்சத்தில், இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்வதற்கு தயாராக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் மனு அளித்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...