மலைபோல் குவிக்கப்பட்டுள்ள டயர்களால் சுகாதாரசீர்கேடு - கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை செல்வபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா குடியிருப்புப் பகுதியில் வாகனங்களின் டயர்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பை-பாஸ் சாலையில் யோகா சாஸ்தா குடியிருப்புப் பகுதி உள்ளது.

இதன் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த டயர்களை பற்றவைத்து, அவற்றிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.



இந்த டயர்களை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவுவதாகவும், இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் உருவாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



அதுமட்டுமின்றி, இந்த டயர் எரிப்புகளால், அப்பகுதி முழுவதும் காற்றுமாசு ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் அப்பகுதியினர், இப்பிரச்னைக்கு கோவை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து நிர்ந்தரத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...