கோவை அரசு மகளிர் கல்லூரியில் 11 புதிய பாடப் பிரிவுகள் துவக்க திட்டம் - கல்லூரி முதல்வர் தகவல்!

கோவை புலியகுளத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அடுத்தாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகளை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் புதிய கட்டிடங்கள் தயாரானதும் பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.


கோவை: புலியகுளத்தில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அடுத்தாண்டு முதல் புதிதாக 11 பாடத்திட்டங்கள் துவங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவை புலியகுளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 650க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வீரமணி கூறியதாவது,

தற்போது இந்த கல்லூரியில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கனிணி அறிவியல், எம்.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளும், பி.எஸ்.சி. அரசியல் அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த கல்லூரி தற்போது 9 அறைகள் கொண்ட பழைய மாநகராட்சி பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

இப்போது பி.ஜி. திட்டங்களை தொடங்க எங்களிடம் போதுமான இடம் இல்லை. எனவே புதிய கட்டிடம் தயாரானதும் அங்கு புதிய படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...