ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி கேட்டதால் கொன்றோம்..! - அன்னூரில் பெண்ணை கொலை செய்த 2 பேர் வாக்குமூலம்!

அன்னூர் அருகே ஏ.மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி(54). பைனான்ஸ் தொழில் செய்து இவர், நேற்று வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்னியப்பன், சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: அன்னூர் அருகே தங்கமணி எனும் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை கைது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஏ.மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயியான இவரது மனைவி தங்கமணி (54). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து அவரது கணவர் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட தங்கமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



மேலும் அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தங்கமணியை கொன்றதாக எல்லப்பாளையம் பிரிவு சுருக்குமணி கவுண்டன் புதூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான கன்னியப்பன் (29), குமரன் காட்டை சேர்ந்த கார்பெண்டர் சுதாகர் என்ற வேங்கை சுதாகர் (30) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.



விசாரணையில் அவர்கள் 2 பேரும் தங்கமணியை கொன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து கன்னியப்பன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். தங்கமணி எனக்கு உறவினர் ஆவார். அவரிடம் நான் கடந்த 2020-ம் ஆண்டு தொழில் தேவைக்காக ரூ.5 லட்சம் கடன் பெற்றேன். ஆனால் என்னால் அசலும் வட்டியுமாக முறையாக செலுத்த முடியவில்லை.

இதன் காரணமாக தங்கமணி அடிக்கடி எனது கடைக்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இது குறித்து எனது நண்பரான சுதாகரிடம் கூறினேன். அவரும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தார்.

நேற்று தங்கமணியை கொலை செய்வதற்காக நானும், சுதாகரும் அவரது வீட்டிற்கு சென்றோம். வீட்டில் அவரது கணவர் இருந்தார். பின்னர் அங்கு டீ குடித்து விட்டு திரும்பி வந்துவிட்டோம். தொடர்ந்து அவரது கணவர் எப்போது வெளியே செல்வார் என கண்காணித்து வந்தோம். அவர் வெளியே சென்றதும் மதியம் 3 மணியளவில் தங்கமணியின் வீட்டிற்கு சென்றோம்.

அப்போது அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து சாப்பாடு கிடைக்குமா? என கேட்டோம். அவர் சமையல் அறைக்கு சென்று சாப்பாடு போடுவதற்காக சென்றார். அவரை நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம்.

பின்னர் மறைத்து வைத்து கார்பெண்டர் பயன்படுத்தும் உளியால் பணம் கேட்டு தொந்தரவு செய்வாயா என கூறிக்கொண்டே தங்கமணியின் கழுத்து, கண்ணம் ஆகியவற்றில் குத்தினோம். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

பின்னர் உளியால் அவரது கழுத்தை அறுத்தோம். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய உளியை ரோட்டில் வீசி விட்டு தப்பிச் சென்றோம். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

பின்னர் போலீசார் கன்னியப்பன், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...