நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்குக..! - தாராபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி தலைமையில் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் விமலா துவக்கவுரையாற்றினார்.

மாவட்ட இணை செயலாளர் பொன்னுத்தாய் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தற்பொழுது தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும் குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் ஒரு மாத கால விடுமுறை விடவேண்டும். 10 ஆண்டு பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்கவேண்டும்.

பதிவேடுகளை அரசே வழங்கவேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஜிபிஎப் பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் என்.கனகராஜ், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...