என்னது.. UPI-ல் பணம் செலுத்தவும் கட்டணமா..? - ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது!

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மொபைல் வாலட்டில் இருந்து ரூ.2000க்கும் மேல் பணம் செலுத்தும் போது 1.1 சதவீதம், பல்பொருள் அங்காடி - 0.9 சதவீதம், அஞ்சலகம், கல்வி - 0.7 சதவீதம் மற்றும் பெட்ரோல், டீசல் - 0.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி: வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் யுபிஐ பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கு 1.1 சதவீத கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண வசூல் விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் மொபைல் வாலட் வழியாக வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதன்படி, பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், எரிபொருள் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும்.

மேலும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும்.

இந்த கட்டண முறையானது, மொபைல் வாலட்டில் இருந்து பணம் அனுப்பும் போது மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...