புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - கோவை இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவசூரியன் செந்தில்ராமன் எனும் இளைஞர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (வயது28).



கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில், அவர் இந்த மாதம் 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இந்த சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.



கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்ட அவர் தற்போது கோவை வந்தடைந்துள்ளார். கோவை ராஜ வீதியில் அவருக்கு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருவதாகவும், இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தில் இருந்து 1920 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டதாகவும் செந்தில்ராமன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு எனக்கு, குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன் எனக் கூறிய அவர், பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...