ராகுல் காந்தி விவகாரம்: தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம் காட்டி காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விசிக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...