கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!

கூடலூர் அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரைந்து விரட்ட வேண்டும் எனத் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: தேவர் சோலை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை உடனடியாக விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 டிவிசன் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிடுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என கூறுகின்றனர்.

இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது, கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுதவிர காட்டு தீ பல இடங்களில் பரவி வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளது.

தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது காட்டு யானைகள் கூட்டமாக வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...