உடுமலையில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து மோசடி - புகைப்படம் வெளியீடு!

உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து புதிய மின் இணைப்புக்கு பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகளை மின் வாரியத்தினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டுக்கு மொபட்டில் வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் புதிய மின்இணைப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500 உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மொபட்டில் பழைய மின்மீட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் அவரை நம்பி பணம் கொடுத்துள்ளனர். இதுபோல உடுமலை நகரில் பல பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்புகளுக்குப் பணம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த நபரின் உருவப்படத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த படத்தை தற்போது வெளியிட்டு பொதுமக்கள் யாரும் இந்த மோசடி நபரிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...