உடுமலையில் தனியார் அறக்கட்டளை சார்பில் 2 நாள் இலவச நீட் பயிற்சி!

உடுமலையில் ‌லெப்டினெட் சுபாஷ், ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு இவர் முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர், அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பலரையும் ராணுவத்தில் சேர்த்து பணியாற்ற ஊக்கப்படுத்தி வந்ததோடு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.



இந்த நிலையில் தனது மகனின் நினைவாக தந்தை கே.ஆர் செல்வராஜ் நூலகம், வகுப்பறை என பல்வேறு வசதிகளோடு அனுபவமிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், சமூக செயல்பாட்டாளர்கள் என சமூக அக்கறை கொண்டவர்களின் ஆலோசனைகளோடும் தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள், காவல்துறை மற்றும் ராணுவத்தில் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.



மேலும் பள்ளி மாணவர்களின் ஆளுமை வளர்க்கும் வகையில் ஓவியம், சிலம்பம், பேச்சுத்திறமை, யோகா பயிற்சி மற்றும் கணிதம், அறிவியல் என பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.



தற்போது மருத்துவம் பயில ஆர்வமும், ஆற்றலும் இருந்தும் நீட் தேர்வை எழுத முன் பயிற்சி பெற இயலாத மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

உடுமலை பகுதியிலிருந்து பல மருத்துவ மாணவர்களை உருவாக்கிய அனுபவமிக்க ஆசிரியர்கள், மிக தரமான பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாண-மாணவிகள் பயிற்சி பெற முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாண-மாணவிகள் பயிற்சி பெற விரும்பினால், பயிற்சி கட்டணத்தை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும். மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...