தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே அங்கன்வாடி கட்டிடப் பணியில் முழுவதும் நிறைவடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன் மற்றும் சரஸ்வதி ராஜேந்திரன், ஷாலினி பவர் சேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், தமிழகத்தில் எண்ணற்ற நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்காத சில நல்ல திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார்.