கோவை அருகே விவசாயிடம் ரூ.8.50 லட்சம் மோசடி - 2 பேர் கைது

கோவை மாவட்டம் சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). இவரிடம் ரூ.8.50 லட்சம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட, சக்திவேல் (26), தமிழரசன் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ரூ.8.50 லட்சம் விவசாயிடம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). விவசாயி. இவருடைய நண்பர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லூப்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ. இந்நிலையில் லோகநாதனிடம், முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள். அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே முனிராஜ் நண்பர்களுடன் காரில் வந்து பணத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பணத்தை வாங்கிகொண்டு இதுநாள் வரையிலும் எவ்வித பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதை அடுத்து பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ராயக்கோட்டை போலீசில் லோகநாதன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து முனிராஜ் நண்பர்களான பாலக்கோட்டை சேர்ந்த சக்திவேல் (26), ஜக்கசமுத்திரம் தமிழரசன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...