நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இன்று ராகுல்காந்தியின் எம்பி பதவி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை: ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று பேசியிருந்தார். மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,வழக்கில் ராகுல் காந்தி, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.இந்நிலையில், தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நீதிபதி எச்.எச்.வர்மா தெரிவித்திருந்தார். அதன்படி பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்.எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டார். உடனடியாக பிணைக்கு ராகுல் காந்தி தரப்பு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என கூறுகிறது.

ராகுல் காந்தி 2019இல் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி விவகாரத்தில் மக்களவை பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...