உடுமலையில் திமுக நகர்மன்றத் தலைவரை பாராட்டி பேனர் வைத்த அதிமுகவினர்! - வைரலாகும் வீடியோ

உடுமலை நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக இருக்கும் மத்தீன், 32வது வார்டில் பல லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தற்காக நன்றி கூறி பாராட்டி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்றத் தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றிய நிலையில் நகரமன்ற தலைவராக மத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.



அதிமுக 5 வார்டுகளில்மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் மதிப்பில் தரைமட்டபாலம் அமைத்து கொடுத்தஉடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நன்றி என 32 வது வார்டு அதிமுக எம்ஜிஆர் மன்றம் ருத்ரப்பநகர் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.



இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறாக ஒரு திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பேனர் வைப்பார்களா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடுமலையில் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பாராட்டும் விதமாக பேனர் வைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் அதிமுகவினரிடையேபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...