கோவையில் உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி

உலக வன தினத்தையொட்டி கோவை அரசுக் கல்லூரயில் வனத்துறை சார்பில் Protect Forest for Better Future எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



கோவை: உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து "Protect Forest for Better Future" என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும், வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்தப் பேரணியை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக் குமார் உட்பட வனத்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக கல்லூரி மைதானத்தில் உலக வன நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...