தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

தமிழக அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், வைகோவும், கமல்ஹாசனும், தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதாகவும், பழனிசாமி, டிடிவி தினகரனும், மக்களை ஏமாற்றும் வகையிலான பட்ஜெட் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்:



தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என அறிவித்து விட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறியுள்ளனர். ஆனால், என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மின்மினிப்பூச்சி போலத்தான், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்:



மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்துள்ளது.

ராமதாஸ், பாமக நிறுவனர்:



ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்க திட்டம், வளமிகு வட்டாரங்கள் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

டி.டி.வி.தினகரன், அமமுக பொதுச் செயலாளர்:



தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதியை உள்ளே சேர்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் தலைவர்:



இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் புரட்சிகரமான திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...