கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் - எம்.பி நடராஜன் வரவேற்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கோவைக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில்வே சேவை என்கிற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு கோவை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எம்.பி பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக எம்.பி பி.ஆர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகையை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளிலிருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளபடியே இது யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு பெரும் உதவி புரியும். இது பெண்களுக்கான உரிமத்தொகையாகவே இருக்கும்.

இதேபோன்று கோவை மாநகரம் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்றாகிப்போனது. இதனை கருத்தில் கொண்டு 2009ல் நான் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்திலிருந்து மெட்ரோ ரயில் சேவையின் அவிசியம் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இதன்தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிபுணர் ஸ்ரீதரனை கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து மெட்ரோ ரயில் சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வைத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அன்றே உறுதிப்படுத்தினோம்.

ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கடந்த அதிமுக அரசு இதனை கிடப்பில் போட்டது. தற்போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், கோவையில் 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவை மாநகர மக்களின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று, மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி திராவிட மாணவர்களுக்காக 100 கோடியில் விடுதிகள், கோவையில் 172 கோடி ரூபாய் மதிபீட்டில் செம்மொழி பூங்கா, கோவையில் புதிய சிப்காட் பூங்காக்கள், கோவை மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை உள்ளிட்ட அறிவிப்புகள் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...