குறிச்சி அரசுப்பள்ளியை மேம்படுத்தக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிந் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும், அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும், ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தத்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினரும் அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசியதாவது, இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அரசாங்கம் பள்ளியை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம்.

மேலும் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் இப்பள்ளியின் அருகிலேயே பலரும் மது அருந்திவிட்டு செல்வதால் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...

கோவையில் 10 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை இடையர் வீதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச...

இங்கிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு

கோவை காந்திபுரம் புதிய சித்தாபுதூரை சேர்ந்த அரவிந்த்குமார், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் அவர்களது நண்பர் தங்க...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...