பொள்ளாச்சி அருகே ஹெல்பிங் ஹார்ட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ஷாப்பிங் அனுபவத்தை தரும் வகையில் நடத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட ஆடை விநியோக நிலையத்தில், மனதுக்கு பிடித்த ஆடைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் எடுத்துச்சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பயன்படுத்தப்பட்ட ஆடை விநியோக நிலையம் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயன்பெற்றனர்.
மனிதனுக்கு இருக்க இடம், உடுக்க உடை என்பது அனைவருக்கும் மிக அவசியமானது ஒன்று. அவ்வாறு பொள்ளாச்சி பகுதியில் உடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவசமாக ‘ஷாப்பிங்’ அனுபவத்தை தரும் வகையில், பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் ஹெல்பிங் ஹார்ட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பினர் சார்பில் நடத்தப்பட்டது.

இதற்காக நல்ல நிலையில் உள்ள ஆண்கள் அணியக்கூடிய வேட்டி, சட்டைகள், டி-சர்ட்டுகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் முதல் முதியவர்களுக்கான பழைய துணிகளை ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வலர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெறுகின்றனர்.
பெரும்பாலும் யார் துணிகளை அளிக்கிறார்களோ அவர்களே அந்த துணிகளை துவைத்து, தேய்த்து, மடித்து புத்தாடைகளை போன்று இவர்களிடம் அளிக்கின்றனர். அவற்றை ஒருமுறை சரிபார்த்து, எப்படி புதிய துணிகள் கடைகளில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்படுமோ அதேபோல் சம்பந்தப்பட்ட கிராமத்தில் விநியோக நிலையத்தில் அடுக்கி வைக்கின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், தங்களுக்கு விருப்பமான தேவையான அளவுள்ள உடைகளை எடுத்துச்செல்லலாம். ஒருவர் தலா 2 உடைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் ஆடைகள் வைக்கப்படுகின்றன.
இதுவரை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி, அர்த்தனாரி பாளையம் மற்றும் திவான்சம் புதூர் ஆகிய இடங்களில் விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டதில் மொத்தம் சுமார் 700 பேர், 1500 க்கும் மேற்பட்ட துணிகளை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள், முதியோர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பில் உள்ளவர்கள் கூறியதாவது, பெரும்பாலும் அந்தந்த கிராமத்தில் அரசு துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று அதே கிராமத்தில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் விநியோக நிலையத்தை அமைக்கிறோம்.
அதேபோல் சனி, ஞாயிறு முகாம் அமைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சம்மந்தப்பட்ட ஊராட்சியின் தலைவருக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமைக்கப்படும் இந்த மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறந்திருக்கும்.

தற்போது பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை தாலுகாவில் கவனம் செலுத்தி வருகிறோம். நேற்றும் இன்றும், திவான்சம் புதூர் பகுதியில் விநியோக நிலையம், அமைக்கப்பட்டதில் இந்த கிராமத்தில் இருந்து வந்த பல பெண்கள் மற்றும் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் தங்களுக்கு விருப்பமான துணிகளை எடுத்துச் சென்றனர்.
இதேபோல, ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்டம் முழுவதும் விநியோக நிலையம் அமைத்து ஏழைகளுக்கு துணிகளை இலவசமாக வழங்க உள்ளோம். துணிகளை வீட்டுக்கு எடுத்துச்சென்ற பிறகு, அளவு போதவில்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோ மீண்டும் அதே இடத்தில் அளித்து மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு, தன்னார்வ அமைப்பினர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் பயன்பெற்ற பொதுமக்கள் கூறியதாவது, எங்களுக்கு பிடித்தமான புதிய ஆடைகளை போல் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையும் அனைவரும் பயன்படுத்த கூடிய அனைத்து விதமான ஆடைகளும் உள்ளது.
குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை எடுத்துச் செல்கின்றனர். இதுபோல ஆறு மாதத்துக்கு ஒருமுறை மீண்டும் இந்த இலவச விற்பனை நிலையம் வந்தால் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ அமைப்பு நிறுவனத்திற்கு விற்பனை நிலையங்களில் துணிகளை அடுக்கி வைப்பது, எடுத்துச் செல்வது போன்ற உதவி பணிகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.