கோவை பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.28 கோடி மோசடி - முக்கிய குற்றவாளி கைது!

கோவையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ளவர்கள் வழங்கப்படும் கடனுதவிக்காக 44 பேருக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து, ரூ.1.28 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்துவிட்டு ஊட்டியில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மார்ட்டின் சாக்கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் போலி ஆவணங்களை தயார் செய்து பொதுத்துறை வங்கியில் ரூ.1.28 கோடி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி ஒன்றில் எக்ஸ்பிரஸ் கிரிடிட் லோன் என்ற திட்டத்தில் சம்பள கணக்கு உள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

இதனையறிந்த கோவையை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் 2019-20 வரை தலைமை மேலாளராக இருந்த மார்ட்டின் சாக்கோ மற்றும் அவருடன் பணிபுரிந்த விஜயகுமார் ஆகியோர் இணைந்து அந்த செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியாத நபர்களுக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போலவும், மாத சம்பளம் பெறுவது போலவும் போலியாக ஆவணம் தயாரித்து அதை வங்கியில் அளித்து கடன் பெற்றுள்ளனர்.

இதன்படி மொத்தம் 44 பேருக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போன்று போலி ஆவணம் தயார் செய்து சுமார் ரூ.1.28 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது வங்கியின் தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மண்டல மேலாளர் செந்தில் குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வங்கி மேலாளர் தண்டபாணி, ஜெயபிரகாஷ் நாராயணன், உதவி மேலாளர் ராதிகா, தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் தலைமை மேலாளராக பணிபுரிந்த மார்ட்டின் சாக்கோ, விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் ராதிகா, விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தனியார் செக்யூரிட்டி நிறுவன தலைமை மேலாளர் மார்ட்டின் சாக்கோ தலைமறைவானார். இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் ரேணுகா தேவி வழிகாட்டுதலின்படி தனிப்படையினர் ஊட்டியில் பதுங்கி இருந்த மார்ட்டின் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...