கோவையில் கொளுத்தும் வெயில் - நீர் சத்து மிக்க பழங்கள் விற்பனை அமோகம்!

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விற்பனை அதிரித்துள்ளது மட்டுமல்லாமல், பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி மற்றும் முலாம் பழம் ஆகியவற்றி விற்பனை அமோகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம்.

உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கா விட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன.

அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன. பிளம்ஸ் பழம் 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடுசெய்யும் வல்லமை கொண்டது.

ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அன்னாசி, ஆரஞ்சு பழங்கள் 87 சதவீதம் நீர் சத்து கொண்டவை. முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 92 சதவீதம் நீர் சத்து கொண்டவை. தர்பூசணியில் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது.

கோவையில் தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்ச்சத்து மிக்க பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், சாத்துக்குடி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதற்காக உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்பட்டு கோவை மார்க்கெட்டுகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிப்பால் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

தியாகி குமரன் மார்க்கெட்டில் முலாம் பழம் ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த மார்க்கெட்டுகளில் அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இதேபோல ஆப்பிள் ஒரு கிலோ 100-ல் இருந்து 160-க்கும், சாத்துக்குடி 60-ல் இருந்து 70-க்கும், கருப்பு திராட்சை 50-ல் இருந்து 80-க்கும், வெள்ளை திராட்சை 50 முதல் 100க்கும், மாதுளை ஒரு கிலோ 150 முதல் 200க்கு, கொய்யா 60 லிருந்து 70-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 80-ல் இருந்து 120-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

முலாம்பழம் ஒரு கிலோ ரூ.40, அன்னாசி ரூ.60, ஆரஞ்சு ரூ.80, மாம்பழம் செந்தூரம் ரூ.120, பங்கன பள்ளி ரூ.150, சப்போட்டா ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எலுமிச்சை பழம் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...