கோவையில் தூய்மை பணியாளர் விபத்தில் பலி - இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணிக்கு சென்ற தூய்மை பணியாளர் சித்ரா (48) மீது தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து, சக பணியாளர்கள் மற்றும் சமூக நீதிக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா(48). இவர் பணிக்கு புறப்பட்டு சென்ற போது, தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது.



இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...