'கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை' சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் விளக்கம்.


சின்னமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்குமார், 35, தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதனை அடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹனீபா, 78 என்ற முதியவரும் தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு, தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் உயிரிழப்பு இல்லை என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஓ. பானுமதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொது "கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போர் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் 68 பேர்  சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதில் நேற்று 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதார துறையில் போதுமான மருந்துகள் கைவசம் உள்ளன. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...