கோவை குருடம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைக்கான பூமி பூஜை!

குருடம்பாளையம் ஊராட்சியில் எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் 300 மீட்டர் தார் சாலை, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து 300 மீட்டர் வரை ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கவும், அதேபோல, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் பார்த்திபன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக அவைத்தலைவர் வேலுச்சாமி, கவுன்சிலர் சிவகுமார், பிரிக்கால் ரவி, தொப்பம்பட்டி தாமோதரன், விஜயகுமார், சதாநந்தன், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமதாஸ், காண்ட்ராக்டர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...