கோவையில் ஆடி அறிமுகப்படுத்தும் டீசல் கார் ஆல்நியு ஆடிஏ4, ஆடி ஏ4 35டிடிஐ

ஜெர்மன் சொகு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மாபெரும் வெற்றிகண்ட ஏ4 ஆடியை தொடர்ந்து தற்போது புதிய டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய ஆடி வகை காரின் அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில், ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி பேசுகையில், வெற்றிகரமாக விற்பனையாகும் சிறந்த மாடலை உருவாக்குவது எளிதான வேலை அல்ல. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையும் மிகவும் பரவசமானது. ஆடிஏ4 35டிடிஐ மேலும் ஒரு உயர்நிலையை எட்டியுள்ளது. ஈடு இணையற்ற தொழில்நுட்பம், முந்தைய ஏ4 ஆடியை காட்டிலும், மறு வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீவிர வரவேற்பை பெற்றுள்ளது.

செயல் திறன், ஓட்டுதற்கு உற்சாகம், உயர்தொழில்நுட்ப தகவல் பொழுதுபோக்கு அம்சம் போன்றவை இந்த பிரிவில் மேலும் ஒரு உயர்வை அளிக்கிறது.

இந்த புதிய வகை ஆடி காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட எரிதிறன் செயல்பாட்டு முறையால் எரிபொருள் சிக்கனத்தில் புதிய நிர்ணயம் கிடைத்துள்ளது.



மறுவடிவமைக்கப்பட்ட 7 ஸ்பீட் எஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன், இன்போடைன்மென்ட் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் , அதிகபட்ச சக்தி தரும் 190 எச்பி இன்ஜினாக மாற்றியுள்ளது" என்றார்.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்ச திறனாக 1ஜிஎச்பி, பலவகை உலோக கலவையால் முந்தைய வாகனங்களை விட 120 கிலோ இலகு எடை, எரிபொருளை சிக்கனப்படுத்த எஸ்-ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுக்கான 7 நிலை வேக கட்டுப்பாடு, சக்தியிலும் எரிபொருள் சிக்கனத்திலும் 7 சதவிகிதம் அதிகரிப்பு, விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ், புதிய எம்எம்ஐ டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

இதன் கோவை மாவட்டத்தில் எக்ஸ் ஷோரும் விலையாக ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...