உப்பிலிபாளையத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.


கோவை: உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு மற்றும் சௌரிபாளையம் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர், செயலாளர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகள் மற்றும் சௌரிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 528 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக குடியிருப்போர் நசை சங்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.



மேலும் மறுகட்டுமானம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இக்குடியிருப்பு சங்கங்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் இதுகுறித்து குடியிருப்போர்களிடம் தெரிவித்து சங்கம் இசைவு தெரிவித்தவுடன், மறுகட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...