கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்துத் தங்க நகைகளைக் கொள்ளையடித்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அன்பு(33) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: விநாயகபுரம், கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட விநாயகபுரம், கணபதி மாநகர், காந்தி மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் மோகன், நந்தகுமார், ராஜேந்திரன், பிரகாஷ், தினேஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி செருப்பனையூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் அன்பு (33) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணம்பட்டி பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அன்பு தான் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க நகைகளை மீட்டு வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.