சத்தியமங்கலம் அருகே பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்!

சத்தியமங்கலம் கடம்பூர் பகுதியில், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பழங்குடியினரின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டன.


ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து, சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதி பத்திரிப்படுகை கிராம மக்களுக்காக ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமினை நடத்தப்பட்டது.

இந்த முகாமில், துவக்க உரை ஆற்றிய முதன்மை விஞ்ஞானியும் STC (Scheduled Tribe Component) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான, புத்திர பிரதாப் பேசியதாவது,

இந்த விழிப்புணர்வு முகாமானது, ‘பழங்குடியின பிரிவிற்கான மேம்பாட்டு செயல் திட்டம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமலை பகுதியைச் சார்ந்த ராமரணை, பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய கிராமங்கள் மற்றும் கடம்பூர் பகுதியினை சார்ந்த பத்திரிப்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 450 பழங்குடியினர் இத்திட்டத்தின் மூலம் பலனடைகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ‘லஹரி பாய்’ என்ற, 27 வயதே நிரம்பிய பழங்குடியின பெண், 150 விதமான பாரம்பரிய சிறுதானியங்களை ‘விதை வங்கி’ மூலமாக காத்து, பிரதமரின் பாராட்டுகளை பெற்றார். பழங்குடி இன மக்களின் அன்றாட உணவு முறையில் சிறுதானியங்கள் மீண்டும் இடம் பெற வேண்டும், என்றார்.

முகாமில் சிறப்புரை ஆற்றிய கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி, பழங்குடியினரின் தேவைகளை அறிவியல் பூர்வமாக கண்டறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு நன்றி. பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட ஊட்டம் தரும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் தொழில் நுட்பங்களையும், சிறு தானிய சாகுபடி முறைகளையும் அறிமுகம் செய்து, அதற்கான தரமான காய்கறி, சிறுதானிய விதைகளையும் வழங்கி, வீட்டுத்தோட்டம், சிறுதானிய சாகுபடி, சிறுதானியங்களிலிருந்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி போன்ற கையேடுகளும் வழங்கிடும் முழுமையான திட்டம் இது. இத்திட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இதனை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

இம்முகாமில், ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை’ முன்னிட்டு, சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டு, திரவ நுண்ணுயிர் மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்று செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதுநிலை விஞ்ஞானிகள், முனைவர் பி. மகேஷ் மற்றும் முனைவர் பி கீதா ஆகியோர் மக்காச்சோள சாகுபடி, சிறுதானிய சாகுபடி, வீட்டுத்தோட்டம் அமைத்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.



முன்னதாக முகாமில், பத்திரிப்படுகை கிராமத்து மக்கள் ‘ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி’ எடுத்துக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து, ‘தேனீக்கள் மூலம் யானை, மனித எதிர்கொள்ளலை குறைக்கும் முயற்சிக்காக தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு அது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



பழங்குடியினருக்கு பண்ணை கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரேடியோ பெட்டிகள், திரவ வெல்லம் விதைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிறைவாக கிராம தலைவர் மாதன் நன்றியுரை ஆற்றினார்.

இம்முகாமில், தமிழக வனத்துறை அதிகாரிகள், கரும்பு இனப்பெருக்கு நிறுவன அலுவலர்கள் மற்றும் திரளான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...