கோவை வடவள்ளி அஜ்ஜனூர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் தரிசனம்!

கோவை வடவள்ளி அடுத்த அஜ்ஜனூர் பரிபாலனா பேஸ் 2வில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் வெகு விமர்சையாக அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகேயுள்ள விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோலாகமாக நடைபெற்றது.

வடவள்ளி அடுத்த அஜ்ஜனூர், பரிபாலனா பேஸ் 2வில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கற்பக விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தேவ சிவ காம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.



இந்நிகழ்வில் அஜ்ஜனூர் பரிபாலனா பேஸ் 2ல் குடியிருப்போர் பலர் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு வழிபட்டனர்.



இந்த கும்பாபிஷேக நிகழ்வை ஆனைகட்டி ஆசிர வித்யா குருகுலம் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி ஜெகதாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

மேலும் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி யாகம் நடத்தப்பட்டு மகா கணபதி யோக வேள்வி மகாலட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்று நான்கு கால பூஜைகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கும்பாபிஷேக தீர்த்தங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குஜன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குமார் மற்றும் பரிபாலனா இல்லத்தை சேர்ந்த பாலாஜி, ரவி, விஸ்வானந்த ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...