ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் - சேலம் ரயில்வே கோட்டத்தில் 14.65 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் 14.65 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்தவர்களிடம் 14.65 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை, சேலம் ரயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளை கண்டறிய, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற சோதனைகளின் போது பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன்படி, சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அபராதமாக ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4. 90 கோடி அதிகமாகும்.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறியதாவது:

2022-23 ஏப்ரல் பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 1,90,202 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் என கண்டறிந்து, அபராதமாக ரூ.13 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 969 வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 14.19 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 40.60 சதவீதம் அதிகமாகும்.

மேலும், 2022-23 ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில் 25, 397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 26,990 வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்ட றியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையில் 530.82 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 531.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும். 53 ஆயிரத்து 598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறை கேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர்.

இதன் அடிப்படை யில் அபராதமாக வசூலித்த மொத்தத்தொகை ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 ஆகும், இது 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 50.33 சதவீதம் அதிகமாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...