நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரிய வெற்றியை பெறும்..! - எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலணி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:



கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்து பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் நிதி உதவி என பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கிம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...