100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறது.
எலையமுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளித்து சட்டத்தின் கீழ் வேலை உறுதி உரிமை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,

அரசு அறிவித்துள்ள சட்டக்கூலி 281லிருந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தினமும் தொழிலாளர்களுக்கு கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் வேலை கொடுப்பதில் சாதி பாகுபாடு காட்டி வேலைகளுக்கு செய்வதை கைவிட வேண்டும்.

அனைவருக்கும் சமமான வேலை வழங்க வேண்டும். பணி தளத்திற்கு காலை 8 மணிக்கு வந்து விட வேண்டும் என்று கடுமையாக நிர்பந்திப்பதை கைவிட்டு 9 மணிக்கு வரவேண்டும் என்பதை நியாயமாக உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எலையமுத்தூர் தம்பிராஜ். சையத். மருதமுத்து. வெங்கடாசலம். மற்றும் தாலூகா நிர்வாகிகள். செளந்தரராஜன். சி.சுப்பிரமணியம். கிருஷ்ணசாமி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.