மருத்துவ சிகிச்சைக்காக கோவை வந்த வெளிநாட்டுப் பெண் மரணம் - போலீசார் விசாரணை!

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வந்திருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே திருமலையம்பாளையத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், மூளை சுருக்கம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அசி கோமர்ஸ்(வயது65) என்பவர், இரண்டு வருடமாக பல இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று சரியாகாததால், கடந்த மாதம் 7ம் தேதி தனது கணவர் மைக்கேல் கோமர்சுடன் வந்து ஆயுர்வேத மையத்தில் சேர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது கணவர் மைக்கேல் கோமர்சிடம் அசி கோமர்ஸ் உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மையத்திற்கு சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் காய்ச்சல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...