கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினவிழாவில், நடத்தப்பட்ட கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவியல் தின விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதியன்று தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்.சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்.சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. இந்த ஆண்டு “உலகளாவிய நல்வாழ்வுக்கான, உலகளாவிய அறிவியல்” என்னும் கருப்பொருளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் மாணவர்களால் தேசிய அறிவியல் தினம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், சிறப்புரையாற்றிய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி பேசியதாவது, 1,960களில் தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, இன்று ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அறிவியல் ஆராய்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த வருடம் 23 அதிக விளைச்சல் தரும் வகைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போதும். உக்ரைன் போரின் போதும் இந்தியா தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்தது. அனைத்து யோசனைகளும் வணிக பயன்பாட்டிற்கு காப்புரிமை பெற வேண்டும், என்றார்.

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பேராசிரியரான ஹரி கிருஷ்ணன் பேசுகையில், மாணவர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியலில் வெற்றிக்கான திறவுகோல் ஏன் என்ற கேள்வி தான். அதனை மாணவர்கள் அனைத்திற்கும் கேட்க வேண்டும். தோல்வியை ஏற்பதும், கடின உழைப்பும் அறிவியலில் வெற்றி பெற தேவையானவை, என்றார்.

மாணவர் அமைப்புச் செயலாளர்கள் பிரகல்யா வரவேற்றார். அரவிந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த 247 மாணவர்கள் கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.