உலக வன விலங்குகள் தினம் - வாளையார் வனப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி!

உலக வன விலங்குகள் தினத்தை வாளையார் வனப்பகுதியில் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வாளையார் வனப்பகுதியில் உலக வன விலங்குகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், வாளையார் வனப்பகுதியில்,உலக வன விலங்குகள் தினத்தை முன்னிட்டு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி , டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பில், வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.



மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் சந்தியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் வனப்பகுதி முக்கியத்துவம் பற்றியும், குப்பைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதில் ராக் ரவீந்திரன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், வாஹித் மோகன், பைசல், விக்னேஷ் ரத்தினம் கல்லூரி ஆசிரியர்கள் சத்குரு, ஞானசேகர், சவ்ந்தர்யா, ஆதித்யா, ராகேஷ் மற்றும் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியர்கள் வெங்கடேஷ் லாவண்யா, சண்முக பிரியா கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தனர்.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் கூறியதாவது:

கோவை மாவட்டம், வாளையார் ரயில் பாதையானது இரு அடர்ந்த வனப்பகுதி வழியே பிரிந்து செல்ல ஏ ட்ராக் மற்றும் பி ட்ராக் இரு பாதைகள் உள்ளன. இவ்வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் வனப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.



இதனை இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், மான்கள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடுகின்றன. இதனால், செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி கடும் வலி ஏற்படுவதால் விலங்குகள் துடிதுடித்து உயிரிழக்கின்றன.

தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று மது அருந்துவதோடு, காலியான கண்ணாடி மது பாட்டில்களை வனத்திற்குள் வீசி செல்கின்றனர். இந்த கண்ணாடி மது பாட்டில்களை அறியாமல் மிதித்துவிடும் யானைகள் படும் வேதனை சொல்லில் அடங்காது.

தரையில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகளின் கால் பாதத்தில் கண்ணாடி துண்டுகள் புகுந்து தொடர்ந்த நடக்க இயலாமல் சாய்ந்து பல நாட்கள் வலியாலும், பசியாலும், தாகத்தாலும் அங்கேயே கிடந்தது உயிரிழந்து விடுகின்றன.

இப்படி மனிதர்களின் அலட்சியத்தாலும் அறியாமையாலும் விலங்கினங்கள் மரணிப்பது தொடர் கதையாகி வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் பயணிகள் செய்யக்கூடாது

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...