கோவை செல்வபுரம் அருகே செல்வ சிந்தாமணி குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிளம்பிங் ஊழியர் கார்த்திகேயன், குளத்தின் நடுவே இருந்த பரிசலை எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). இவர் தனது நண்பர்களுடன் செல்வ சிந்தாமணி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
குளித்துக் கொண்டிருந்த போது குளத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த பரிசலை எடுப்பதற்காக கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்திச் சென்றார்.
இந்நிலையில் பரிசலை எடுத்துவிட்டு வரும்போது கார்த்திகேயன் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறிது நேரத்தில் குளத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.