லாரி மூலம் மோதி கார் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக, கோவைப்புதூரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பிரான்சிஸ் சேவியர், லாரி ஓட்டுநர் நீலகண்டனை பலமாக தாக்கியுள்ளார். குனியமுத்தூர் போலீசார் பிரான்சிஸ் சேவியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் பிரான்ஸில் சேவியர் (வயது52). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் தற்போது கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸிஸ் சேவியர் தனது காரை அப்பகுதியில் நிறுத்தி விட்டு, பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டிட வேலைக்காக அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது65) என்பவர் தண்ணீர் லாரியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி, பிரான்ஸிஸ் சேவியரின் காரின் முன் பகுதியில் மோதியதில் கார் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நீலகண்டன் சேதத்திற்கான பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். கூறியபடி நீலகண்டன் பணம் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால், கட்டிட வேலை செய்யும் இடத்தில் நின்றிகொண்டிருந்த நீலகண்டனிடம் பிரான்ஸிஸ் சேவியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். இதில், நீலகண்டன் அருகே இருந்த 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த நீலகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் கட்டிட ஒப்பந்ததாரர் பிரான்ஸிஸ் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.