கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.
கோவை அரசு கலை கல்லூரியில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெற்றது.

கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பேராசிரியர்களுடன் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய ஆட்சியர், சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள கல்லூரியில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை கல்லூரி மாணவர்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தங்களது பலம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். தாங்கள் செய்யக்கூடிய பணியில் சிறப்பானவராக விளங்க வேண்டும். புதிதாக என்ன கற்றுக்கொண்டால் முன்னோக்கி செல்ல முடியும் என்பதில் மாணவர்கள் தெளிவடைய வேண்டும்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினக்கூலிக்கு வந்த பலர் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலாளிகளாக உயர்ந்துள்ளனர்.
நான்காவது வரை படித்த ஜி.டி. நாயுடு புதிய கண்டுபிடிப்புகளையும், தொழிற்துறை சிந்தனைகளை கோவை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார், என்றார்.