திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், விலங்குகளுக்கு தொந்தரவு அளிக்காமல் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னாறு சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட வனப்ப குதியில் அமைந்துள்ளது. ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து துவங்கும் இந்த சாலை, மாநில எல்லையான சோதனைச்சாவடி வரை 20 கி.மீ. வரை உள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்புக்கருதி, வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில், ஆங்காங்கே விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள், வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், வனவிலங்குகளை கண்டு களிக்க சுற்றுலாப்பயணியர் பலர், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி மூணாறு சென்று திரும்புகின்றனர். அவர்களில் சிலர் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி மது அருந்துவதுடன், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பயன்படுத்திய பாலித்தீன் பைகளை வனப்பகுதியில் வீசிச்செல்வதாக புகார் எழுந்து உள்ளது.

வனத்தில் வறட்சி நிலவி வருவதால், காலை மற்றும் மாலை நேரத்தில், யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக, அமராவதி அணை நோக்கி செல்கின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் சுற்றுலாப்பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை மையப்படுத்தி, 'செல்பி எடுக்க முற்படுகின்றனர்.
அவ்வப்போது, யானை உள்ளிட்ட விலங்கினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவர்களை துரத்தும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டுனர்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் கண்காணிப்பும் தீவிரமாக்கபட்டுள்ளது.