பல்லடம் அருகே வாங்கிய கடனுக்காக வீட்டை பூட்ட வந்த வசூல் அதிகாரிகள் - மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய 1.30 லட்சம் கடனை தவணை தேதிக்குள் செலுத்தாத முதியவர் கருப்பசாமியின் வீட்டை பூட்டுவதற்காக வசூல் அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில், மூதாட்டி வேலாத்தாள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாங்கிய கடனுக்காக வசூல் அதிகாரிகள் வீட்டை பூட்டுவதற்காக வந்த நிலையில், மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. பல்லடம் தாலுகா அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்த இவர் 2017 ஆம் ஆண்டு மகேந்திரா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து 1,30,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடன் வாங்கிய ஒரு வருடத்திலேயே கருப்பசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி வேலாத்தாள் மற்றும் அவரது மகன் நாகராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று மாதா மாதம் கடன் தவணையை முறையாக கட்டி வந்துள்ளனர்.

மொத்தம் 62 மாதங்கள் கட்ட வேண்டிய கடன் தவணை, கடந்த ஆறு வருடங்களாக முறையாக 58 கடன் தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தனது தாய் வேலாத்தாளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவு அதிகரித்த காரணத்தால் தவணையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

16 ஆயிரத்து 200 ரூபாய் தவணை மீதமிருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மகேந்திரா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் வசூல் அதிகாரிகள் தொடர்ச்சியாக வேலாத்தாள் வீட்டிற்கு வந்து கடன் தவணை செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று வேளாத்தாளின் வீட்டிற்கு வந்த வசூல் அதிகாரிகள் அவரது வீட்டு சுவரில், "இவர் மகேந்திரா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார் எனவும் கடனை கட்ட தவறியதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இவருக்கு யாரும் கடன் தரக் கூடாது எனவும் பண பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது" எனவும் பெயிண்டில் எழுதி வைத்து சென்றுள்ளனர்.



மேலும் இன்று வேலாத்தாள் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்புகையில் அவரது வீட்டிற்கு வந்த சந்துரு, தினேஷ், பிரபாகரன் ஆகியோர் தவணைத் தொகையை கட்டுமாறும் பணம் கட்டாவிட்டால் வீட்டு பத்திரத்தை தர மாட்டோம் எனக்கூறி வேலாத்தாளின் வீட்டை பூட்டு போட முயன்றனர்.



இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வசூல் அதிகாரிகளையும், அவர்களது வாகனத்தையும் சிறை பிடித்தனர். இந்நிலையில் திடீரென வேலாத்தாள் வீட்டில் இருந்த மண்ணெண்யெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.



இதனிடையே வசூல் அதிகாரிகள் முற்றுகை குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீக்குளிக்க முயன்ற வேலாத்தாளை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று பேரையும் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளதாகவும் இன்னும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி தொடர்ச்சியாக நிதி நிறுவனம் தொல்லை கொடுத்து வருவதாகவும் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வீட்டு பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மறுப்பதாகவும் வேலாத்தாளின் மகன் நாகராஜ் மகேந்திரா நிதி நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளார்.

கடன் தொகையை கட்டாததால் வசூல் அதிகாரிகள் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நிலையில் மூதாட்டி வேலாத்தாள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...