கோவை காரமடை அரங்கநாதர் சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் மாசிமக தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


கோவை: கோவை அரங்கநாதர் சாமி கோவிலின் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலிருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11.10 மணிக்கு கொடி ஏற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்கத் தலைவர் கே.பி.வி.கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு 8.30 மணிக்கு அன்ன வாகன உற்சவம் நடக்கிறது. நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை தினசரி இரவு 8.30 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், அறுபத்து வாகன உற்சவமும், வெள்ளிக்கிழமை கருட சேவையும் நடக்கிறது.

4ஆம் தேதி காலை 10.45 மணிக்கு பெட்டத்தம்மன் அழைப்பு புறப்பாடு நடக்கிறது. 5ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு யானை வாகன உற்சவம் நடக்கிறது. 6ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருள்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது. 7, 8-ந் தேதிகளில் பரிவேட்டையுடன் குதிரை வாகன உற்சவமும், தெப்போற்சவமும் மற்றும் சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி சந்தான சேவை நடக்கிறது. 10-ந் தேதி காலை 9 மணிக்கு வசந்தம் நடக்கிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...