உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இதனை தடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறையினர், அப்பகுதியில் குருத்து அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களில் குருத்து அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது என வேளாண் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளனர். மேலும் இதனை வாழ்வாதாரமாக நம்பி பல்வேறு கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதிகளில் கேரள வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறி ஏராளமான தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே இது மற்ற தென்னை மரங்களுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி, வேளாண் உதவி இயக்குனர் மார்க்கண்டேயன், வைரமுத்து, பொங்கலூர் வேளாண் அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, பயிர் பாதுகாப்பு துறை இணை பேராசிரியர் கலையரசன்ஆகியோர் கொண்ட குழுவினர் ராவணபுரம், மொடக்குப்பட்டி பகுதிகளில் தென்னந்தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆய்விற்கு பின்னர் வேளாண் குழுவினர் கூறியதாவது,
இப்பகுதியில் கேரளா வாடல் நோய் பாதிப்பு இல்லை. குருத்து அழுகல் நோய் சில மரங்களில் காணப்படுகிறது. இதற்கு காப்பர் ஆக்சைடு குளோரைடு எனும் பூஞ்சான கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரை மூன்று கிராம் வீதம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்றி கட்டுப்படுத்த வேண்டும். தென்னை மரங்களை வளப்படுத்த ஒரு கிலோ யூரியா இரண்டு கிலோ சூப்பர் 3.5 கிலோ பொட்டாஷ், 40 கிராம் போரக்ஸ் 500 கிராம் மெக்னிசியம் சல்பேட் ஒரு கிலோஜிப்சம் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மக்கிய தொழு உரம் 500 கிராம் தென்னை மின்னோட்டம் ஆகியவற்றை ஆண்டுக்கு இருமுறை பிரித்துமே மற்றும் நவம்பர் மாதங்களில் ஊற்ற வேண்டும்.