உடுமலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ - தீத்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள மறையூர் காந்தலூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஏக்கர் பரப்பில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான மறையூர் காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



இதனால், அரிய வகை மூலிகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.



மேலும் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் உடுமலை வனத்துறையினர், கோடந்தூர் ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, வனப்பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...