புற்றுநோயை குணப்படுத்தும் ஹைபர்தீமியா சிகிச்சை மையம் கோவை பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை புற்றுநோயை குணப்படுத்தும் ஹைபர்தீமியா சிகிச்சை மையம் இந்தியாவில் முதல்முறையாக பொள்ளாச்சியில் துவங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் அழிவுகளிலிருந்து மனித உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, இயற்கையாக குணப்படுத்தும் நோக்கத்துடன் மிராக்கிள் வெல்னஸ் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மிராக்கிள் சிகிச்சை மையம் முதல்முறையாக இந்தியாவில் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

இதனை முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு பின், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, புற்றுநோய் என்பது தீராத கொடிய நோய் என்ற நிலையை மாற்றி ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கீமோ இல்லாத சிகிச்சை முறையை மிராக்கிள் கிளினிக் வழங்கி வருகிறது.

பயமில்லா நிலையை நோயாளிகளுக்கு புகட்டுவதன் முலம் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. இந்த ஹைபர்தீமியா சிகிச்சை முறை கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையை விட மனித உயிர் வாழ்வில் 30 - 40 % வெற்றி விகிதத்தை தருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாத வகையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மன், ஜப்பான், கனடா என உலகம் முழுவதும் 600 ஹைபர்தீமியா கருவிகள் உள்ளது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக பொள்ளாச்சியில் இந்த சிகிச்சை முறை துவங்கப்பட்டுள்ளது.