இரண்டாவது முறையாக சட்டப்பேரவை ஒத்திவைப்பு!


பெரும்பாண்மையை நிரூபிக்க  சட்டப்பேரவை கூடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் கூடினர். தொடர்ந்து, பன்னீர் செல்வம் அணியினரும், எதிர்க்கட்சியான தி.மு.க  மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டமன்றத்தில் கூடினர். காலை 11 மணியளவில் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் தொடக்கம் முதலே எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்தனர். மேலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபாநாயகர் தனபாலின் மைக்கை உடைத்தனர். இதன் காரணமாக சட்டப்பேரவை மதியம் ஒரு மணிவரை ஒத்திவைக்கபட்டது.

பின்னர், 1 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் நீடித்தது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரி சபாநயகரின் இடத்தை முற்றுகையிட்டனர். இந்த அமளியின் போது சபாநாயகர் தனபாலின் மேற்சட்டை கிழிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இரண்டாவது முறையாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மூன்று மணி வரை சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், வெளியேற மறுத்து தற்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழல் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...