மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கடனுதவி - பொள்ளாச்சி எம்.பி வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தலைமையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம், முதல்வர் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு ஊரில் வசிக்கும் பெண்களில் 25 சதவீத பெண்கள் குழுக்களில் இருந்திட வேண்டும்.



பத்தாண்டுகளுக்கு மேலான உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், 15 ஆண்டுகள் செயல்படும் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கியில் சாதாரணமாக கடனுதவி பெறக் குறிப்பிட்ட தொகை பெற, சொத்தை அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும் என்ற நிலை மாறி எவ்வித அடமானம் இல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...