'ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக படுகொலை நடக்கிறது..!' - கோவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில், ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.



கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும்.

ஆளுங்கட்சியான திமுக, வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு போடுவதாகவும் அங்கு நடைபெறும் குளறுபடிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சூழலில் பலமுறை இந்த விதிமுறைகள் குறித்து தான் பேசியும் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஆனால் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவது எந்த விதத்தில் நியாயம். ஊடகத்தினருக்கான நேர்மையும், தர்மமும் உள்ள சூழலில் அவர்கள் அதனை மீறக்கூடாது. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது.



ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் முழுக்க முழுக்க விதிமீறலில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நாட்டின் முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியவரும். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு ஈரோடு இடைத்தேர்தலில் பிரமாண்டமாகவும், கடுமையாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

இதேபோல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுசெயலாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கூடி பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...