முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - வால்பாறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை, கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.



கோவை: கோவை ஓபிஎஸ் அணி சார்பில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படம் வைத்து, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்வில் நகர் செயலர் மிக்சர் கடை முருகன், நகர துணை செயலாளர் கொங்கு மாரிமுத்து, அவை தலைவர் ராமராஜ், மாவட்ட பிரதிநிதி ஆணைமுடி செல்லதுரை, வார்டுசெயலாளர் காஞ்சமலை மாரிசாமி, துணை தலைவர் அந்தோணி மற்றும் சுரேஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



அதேபோல, வால்பாறை நகர அதிமுகவினர் சார்பில் நகர செயலாளர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதை போல் நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவை தலைவர் சுடர் பாலு, தலைமையில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேஷ், 17 வார்டு உறுப்பினர் மணிகண்டன், பெருமாள் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...